/* */

வேலை இருக்கா? என கேட்டவருக்கு விழுந்த விறகு அடி.. போதை ஆசாமி அதிரடி கைது

குமாரபாளையத்தில் வேலை கேட்ட ஒருவரை போதை ஆசாமி ஒருவர் விறகால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வேலை இருக்கா? என கேட்டவருக்கு விழுந்த விறகு அடி.. போதை ஆசாமி அதிரடி கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிப்பவர் சக்திவேல்ராஜா, 54. சமையல் மாஸ்டர். இவர் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குழந்தசாமி, 48. கட்டிட கூலி. சக்திவேல்ராஜா, குழந்தசாமியிடம், தனக்கு வேலை எதாவது கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.

மது போதையில் இருந்ததாக கூறப்படும் குழந்தசாமி, விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார். இதனால் சக்திவேல்ராஜா பலத்த காயமடைந்த நிலையில் குமாரபாளையம் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சக்திவேல்ராஜா குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குழந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு

குமாரபாளையம் சிவசக்தி நகர் பெற்றோர் வீட்டில் வசித்து வருபவர் மோகனாம்பாள், 38. சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் வேலுமணி, 44, என்பவருடன் வசித்து வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறை, குளியல் அறை ஆகிய இடங்களில் கேமரா வைத்த வழக்கில், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியில் வந்த பின், இவர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்த மோகனாம்பாள், தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வேலுமணி மற்றும் சிலர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் சிவசத்தி நகரில் உள்ள தன் மனைவியை சந்தித்து தகாத வார்த்தை பேசியதுடன், தாக்கியுள்ளார்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருத்து தப்பி சென்று விட்டார். இது குறித்து மோகனாம்பாள் குமாரபாளையம் போலீசில் தன் கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, புகார் கொடுத்துள்ளார். தலைமறைவான வேலுமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

மின் மோட்டார் திருடியவர் கைது

குமாரபாளையம், காவேரி நகர், காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி, 50. டிரைவர். இவரும், இவரது குடும்பத்தாரும் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் தூங்கிவிட்டு, நேற்று காலை 06:00 மணியளவில் தனது மொட்டை மாடியில் சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த பழுதான மின்மோட்டார் காணவில்லை.

இவர்கள் வீட்டின் பின்புறம் படுத்திருந்த டிரைவர் சீனிவாசன், 41, என்பவர் மீது சந்தேகப்பட்டு கேட்ட போது, தான்தான் எடுத்தேன் என ஒப்புக்கொண்டார். இதனால் குமாரபாளையம் போலீசில் திருமூர்த்தி புகார் கொடுக்க, டிரைவர் சீனிவாசனை போலீசார் கைது செய்ததுடன், 10 ஆயிரம் மதிப்பிலான மோட்டோர் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 30 Jan 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’