/* */

பள்ளி பேருந்துகள் ஆய்வு: தகுதியற்ற பேருந்துகளை நிறுத்த ஆட்சியர் அறிவுரை

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்க உள்ளதால், பேருந்துகளின் தகுதி குறித்து இன்று ஆய்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளி பேருந்துகள் ஆய்வு:  தகுதியற்ற பேருந்துகளை நிறுத்த ஆட்சியர் அறிவுரை
X

பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்கிறார்.

வரும் 1 ம் தேதி முதல் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, கரூரில் உள்ள 92 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 463 பேருந்துகளும் இன்று வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பள்ளி பேருந்துகளில் ஏறி நேரிடையாக ஆய்வு செய்தார். பல்வேறு குறைபாடு உள்ள பேருந்துகளை மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் 92 பள்ளிகளை சேர்ந்த 463 பேருந்துகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த காலத்துக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களின் தகுதி குறித்து தற்போது சோதனை செய்யய்ப்படுகிறது.

பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு தகுதியாக உள்ளது குறித்த சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகள் சுத்தமாகவும், சுகாதாரமாக இருக்கிறதா என்று சோதனை செய்யபடுகிறது. அவசர கால வழி, தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி ஆகிய உள்ளதா என்று சோதிக்கப்படுகிறது. பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பல வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சரியாக உள்ள வாகனங்கள் மட்டுமே மாணவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றார். தீயணைப்புத் துறையினர், தீ விபத்துகளை அணைப்பது மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

Updated On: 29 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!