/* */

இந்து கோயில் வருமானம் இந்து கோயில்களுக்கே போய் சேரவேண்டும் : இந்து மகா சபா

இந்து கோயில் வருமானம் இந்து கோயில் களுக்கே போய் சேரவேண்டும் எனஅகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது

HIGHLIGHTS

இந்து கோயில் வருமானம் இந்து கோயில்களுக்கே போய் சேரவேண்டும் :  இந்து மகா சபா
X

நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் பகுதியில் நடந்த அகில பாரத இந்து மகா சபாவின் அறுபத்தி மூன்றாவது தேசிய பிரதிநிதிகள் மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் பகுதியில் இன்று அகில பாரத இந்து மகா சபாவின் அறுபத்தி மூன்றாவது தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி ஜி மஹாராஜ், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய துணை தலைவர் தா. பாலசுப்பிரமணியன் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு பின்னர் அகில பாரத இந்து மகா சபாவின் மாநில தலைவர் தா. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் பகுதியில் இன்று அகில பாரத இந்து மகா சபாவின் அறுபத்தி மூன்றாவது தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு, கடந்த சில மாதங்களில் 154 கோயில்கள் உடைக்கப்பட்டு உள்ளன. கோயில்கள் மற்றும் கோயில் நிலங்கள் அனைத்தும் அரசின் கையில் உள்ளது, கோயில் நிலத்தில் அரசு அலுவலங்கள் உள்ளன.

இந்து ஆலயங்களின் வருமானம் கோயில்களுக்கு சேரவேண்டும் எனவும், யாரும் அதை கபளீகரம் செய்ய முடியாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 30 ஆண்டு பழமையான கோயில்களை இடிக்கக்கூடாது என விதிமுறைகள் இருந்தும், அவை கண்டுகொள்ளப்படவில்லை. அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு இயக்கத்தை துவக்கி உள்ளது, மதமாற்ற தடை சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும், ஹிஜாப் கலாசாரம் பொது இடத்தில் அனுமதிக்க கூடாது என்றார் அவர்.

Updated On: 21 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா