/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவுகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு வெளியீடு
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் , மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்கள் தேர்தலில் அதிகபட்ச தேர்தல் செலவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ9000

ஊராட்சி மன்ற தலைவர் - ரூ34000

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ85000

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ1,70,000

மேற்கூறப்பட்ட தொகையை மட்டும் செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கத் தவறியவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாதவர்கள் என மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On: 14 Sep 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!