/* */

மனு அளிக்க காரை மறித்த பொதுமக்கள், காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை கேட்ட ஆட்சியர்

உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி மக்கள் தொடர்பு முகாமுக்கு சென்று திரும்பிய போது ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

மனு அளிக்க காரை மறித்த பொதுமக்கள், காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை கேட்ட ஆட்சியர்
X

உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் கிராம மக்கள் தங்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கை மனுக்களாக அளித்த போது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை வழிமறித்த மல்லிகாபுரம் கிராம மக்களுக்காக காரை விட்டு இறங்கி மக்கள் குறைகளை கேட்டு அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் கூறிய செயல் வரவேற்பை பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை ஓரம் நின்று மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்தனர்.


உடன் காரை ஓரமாக நிறுத்த சொன்ன மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காரில் இருந்து இறங்கி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கையில் வைத்திருந்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கும் பொழுது பத்து நபர்களுக்கு விடுபட்டு போனதாகவும், விடுபட்டது அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கால்வாய் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதனை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அரசு விதிகளின்படி கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு உட்பட்டு, அதன் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து அங்கிருந்து கிளம்பினார்.

மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் காரை திடீரென பொதுமக்கள் வழிமறித்த நிலையில் உடனடியாக காரை சற்று தள்ளி ஓரமாக நிறுத்தி குறைகளைக் கேட்டிருந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 10 Aug 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...