/* */

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள்: ஆட்சியர் கலைச்செல்வி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் அரசு வழிகாட்டுதலின்படி நடைபெறும்.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள்: ஆட்சியர் கலைச்செல்வி தகவல்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுதல் குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களில் 274 கிராம ஊராட்சிகள் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை உபயோகப்படுத்துதல்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

மேலும், கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும்.

பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்

Updated On: 9 Aug 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது