வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
கோவையில் பீீப்பில்ஸ் பார் அண்ணாமலை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலில் ஒரு இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் பலர் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பீப்பில்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பின் சார்பில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் ஏராளமான பொதுமக்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பிய பீப்புல்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பினர், தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜூன் நான்காம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பீப்பிள்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பை ஏற்படுத்தி அவருக்காக வாக்கு சேகரித்து வந்ததாகவும், தாங்கள் வாக்கு சேகரித்த பொதுமக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu