/* */

பாக்ஸ்கான் தொழிலாளர்களை அத்துமீறி கைது செய்ததை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

பாக்ஸ்கான் தொழிலாளர்களை அத்துமீறி கைது செய்த காவல் துறையை கண்டித்து காஞ்சிபுரத்தில் சிஐடி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாக்ஸ்கான் தொழிலாளர்களை அத்துமீறி கைது செய்ததை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கான விடுதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

பூந்தமல்லி விடுதியில் தரமற்ற உணவு அங்கு தங்கியிருந்த 159 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்ததாக தவறான தகவல் பரவியதன் காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு 10 மணி முதல் 18 மணி நேர போராட்டத்தை ஊழியர்கள் பல்வேறு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, ஐஜி, காவல் கண்காணிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு பின் நேற்று மாலை 4 மணிக்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஓரகடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் இருந்து வெளியேற மறுத்து அங்கு அமர்ந்திருந்ததால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டதாகவும், இது சாலை மறியல் தொடர்பாக சிஐடியு சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்ட 22 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே மாவட்ட விவசாய சங்க தலைவர் நேரு தலைமையில் 50 க்கும் மேற்பட்ட சிஐடியுவினர் காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் , தொழிலாளர்கள் மீது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் செயல்பட்டதை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், பதிவிட்ட அனைவரையும் விடுகதை செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

Updated On: 19 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்