/* */

பாதுகாப்பற்ற நிலையில் சமையல் அறையிலேயே செயல்படும் அங்கன்வாடி பள்ளி

காஞ்சிபுரம் அடுத்த தம்மனூர் அங்கன்வாடி மையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு சிறிய அறையில் இயங்கி வருகிறது.

HIGHLIGHTS

பாதுகாப்பற்ற நிலையில் சமையல் அறையிலேயே செயல்படும் அங்கன்வாடி பள்ளி
X

காஞ்சிபுரம் அடுத்த தம்பனூர் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் ஆபத்தான முறையில் சமையலறை மற்றும் கல்வி கற்றல் என ஓரே அறையில் பயின்று வரும் இளம் குழந்தைகள்.

காஞ்சிபுரம் அருகே தம்மனூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டித்தின் அறையில் ஆபத்தான வகையில் சமையல் கூடத்திலேயே அங்கன்வாடி மையம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூன்று வயதுடைய குழந்தைகள் இளம் வளர் பருவ கல்வி பயில கிராமங்கள் தோறும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு , குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்து‌ அவர்களுக்கு தேவையான உணவுகளை அளித்தும் , கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் கல்வி உபகரணங்கள் வழங்கி கற்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட தம்மனூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறது.

இக்கிராமத்தில் மாணவர்கள் கல்வி பயில பாலர் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நகர்ப்புற நூலகம் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கு இருந்த அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கிராம ஊராட்சி மன்ற கட்டிடத்தின் ஒரு அறையில் 100 சதுர அடிக்கு குறைவான இடத்தில் அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யபட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில், அந்த அறையிலேயே பொருட்கள் இருப்பு மற்றும் சமையலறையும் செயல்பட்டு வருகிறது.

அவர்களுக்கு தேவையான உணவு தயாரிப்பு செய்ய ஊழியர்கள் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் அருகிலேயே குழந்தைகள் அமர்ந்து விளையாடிக் கொண்டும் வருகின்றனர்.

மேலும் குழந்தைகள் அடிக்கடி எழுந்து சென்று வரும் நிலையில், தன்னை அறியாமல் சிலிண்டரின் பைப் லைன் பகுதி கை கட்டும் தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதும் அதன்‌ ஆபத்தை உணர்வால் விளையாடி வருகின்றனர்.

எரிவாயு சிலிண்டர்களை சாதாரண பெரியவர்களே கையாள்வது கடினமான சூழ்நிலையில், எரிவாயு சிலிண்டர் பகுதியிலே கல்வி கற்க வந்த சிறுவர்கள் அமர்ந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடி விபத்து‌ ஏற்பட்டு தற்போது வரை 9நபர்கள் உயிரழந்தும், 3 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ‌இனி இதுபோன்று எந்த நிகழ்வும் நடக்கக்கூடாது என நினைத்து வரும் நிலையில் குறைந்த காற்றோட்ட வசதி, வெளியேற ஒரே வழி என பல குறைபாடுகள் தான் மையம் செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும், அதுவரை அருகிலுள்ள வேறு இடம் தேர்வு செய்யவேண்டும் அல்லது சமயலறையாவது இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Oct 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!