/* */

மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் பில்லூர் குடிநீர் திட்டம்

ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் பில்லூர் குடிநீர் திட்டம்
X

ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் ஆய்வு செய்தார். மேலும் இந்த திட்டம் மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை நகருக்கு கூடுதல் குடிநீர் வழங்க பில்லூரில் 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கட்டான்மலை பகுதியில் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.

மேலும் ரூ.442 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்த குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தார். இந்த திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தி பயன்பாட்டுக்கு வரும்போது நகரில் தனி நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படும். இதற்காக மொத்தம் 90.76 கிலோ மீட்டர் தூரத்துக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது.

தற்போது வரை 37 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதில் 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. 178 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளில் 91 சதவீதம் முடிந்துள்ளது. சுரங்கப்பாதை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது.

குழாய்கள் அமைக்கவும், பிரதான தரைமட்ட தொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம். 121 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமான நிலம். நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிந்து இந்த திட்டம் வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

Updated On: 30 Jan 2023 1:26 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்