/* */

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக விவசாய அணி முடிவு

அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்;  கோட்டையை முற்றுகையிட  பாஜக விவசாய அணி முடிவு
X

அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவையில், பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

மூன்றாண்டுகளுக்கு முன், 1,856 கோடி ரூபாயில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள், தற்போது கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் கோவையில் உள்ள 2,000 குளம் குட்டைகள் பயன் பெறும். இதில் இன்னும் 800 குட்டைகளை இணைக்கப்பட உள்ளது. கொரொனா காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்ட பணிகளை மேற்கொண்டார். இத்திட்டம் 2021 ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம். ஆனால் திமுக அரசு பதவியேற்ற பின், 2.2 கிமீ க்கு பைப் போடாததால், 17 மாதங்களாக இத்திட்டம் கிடப்பில் கிடப்பில் உள்ளது. திட்டமிட்டபடி, கடந்தாண்டில் பணி முடித்திருந்தால், பல்வேறு பயன்கள் கிடைத்திருக்கும்.

அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1,000 வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். அதற்குள் இத்திட்ட பணிகளை முழுமையாக, அரசு முடிக்க வேண்டும், என்றார்.

Updated On: 12 Aug 2022 5:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!