திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
Tirupur News- 'நீட்' தேர்வெழுதிய மாணவ, மாணவியர் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், நான்கு மையங்களில் 'நீட்' தேர்வை மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் எழுதினர்.
திருப்பூர் மாவட்டத்தில், பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி, ஏ.வி.பி., கல்லுாரி, லிட்டில் கிங்டம் பள்ளி, கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகிய நான்கு மையங்களில் நேற்று மதியம், 2:00 முதல், 5:00 மணி வரை நீட் தேர்வு நடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஏ.வி.பி., கல்லுாரி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், 720 பேரும், குறைந்தபட்சமாக பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில், 507 பேரும் என, மாவட்டத்தில் மொத்தம் தேர்வெழுத, 2,619 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,532 பேர் தேர்வெழுதினர்.
நான்கு மையங்களில் தேர்வறை கண்காணிப்பு அலுவலர், உதவி அலுவலர் உட்பட தேர்வு நடத்தும் பணியில், 456 பேர் ஈடுபட்டனர்.
தேசிய தேர்வு முகமையின் வழிகாட்டுதல் படி தேர்வெழுத வந்த மாணவ, மாணவியர் நான்கு கட்ட பரிசோதனைக்கு பின் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.தேர்வு மைய வளாக முதல் நுழைவு வாயிலில் மாணவர் பெயர், விபரம், ஹால்டிக்கெட், போட்டோ, ஆதார் கார்டு விபரங்கள் சரிபார்க்கப்பட்டது.
இரண்டாவது நுழைவில், மாணவ, மாணவியரை தனித்தனி அறையில் சோதனையிடப்பட்டது. மாணவியர் கம்மல், செயின், தலைமுடி பேண்ட் அணியக்கூடாது எனக்கூறி, அவற்றை அகற்றுமாறு கூறினர்.
மாணவர்கள் கையில் கட்டியிருந்த சிவப்பு கயிறு, அரைஞாண்கயிறு கட் செய்து, குப்பையில் வீசப்பட்டது. 'மெட்டல்டிடெக்டர்' கருவி மூலம் முழு சோதனை நடந்த பின், மூன்றாவது நுழைவு வாயிலில், லேப்டாப், 'ஐ பேடு' உதவியுடன் மாணவ, மாணவியரை ஸ்பாட் போட்டோ எடுத்த 'அப்லோடு' செய்து, விரல்ரேகை வைத்து, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த விரல்ரேகையுடன், தற்போது, விரல்ரேகைஒப்பீடு செய்யப்பட்டது. அதன் பின், பதிவு எண்ணை பார்த்து விட்டு, தேர்வறைக்குள் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.
காலை, 11:15 மணி முதல் மாணவ, மாணவியர் தேர்வு மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதல் நுழைவு வாயிலுக்கு, 20 மீ., முன்பாகவே பெற்றோரை போலீசார் அனுப்பி வைத்தனர். மதியம், 1:20 வரை சீரான இடைவெளியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்துக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டனர். மதியம், 1:30க்கு இறுதி அழைப்பு விடுக்கப்பட்டது; 1:40 க்கு தேர்வு மைய கேட் மூடப்பட்டது. பெற்றோர், கைகுலுக்கி, முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu