/* */

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2322 நீர்நிலை வழித்தடங்களை சரிசெய்ய கோரிக்கை

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2322 நீர்நிலை வழித்தடங்களை சரிசெய்ய கோரிக்கை
X

அரியலூரில் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வைத்துள்ள கோரிக்கைகள் விவரம்:

1.அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2322 நீர்நிலைகளையும் மழைக்காலங்களில் பெய்து வரும் மழை நீரை முறையாக சேமித்து முழுமையான நீர்பிடிப்பு பகுதிகளாக மாற்றிடவும் நீர்வழித்தடங்களை சரி செய்திடவும் மேலும் புதிய நீர்ப்பிடிப்பு பகுதிகளை உருவாக்கிடவும் உறுதியான விரிவான திட்டங்களை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

2.மருதையாறை ஒட்டி உள்ள வெட்டிமுடிக்கப்பட்ட காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மழைக்காலங்களில் வரும் வெள்ள நீரை சுரங்கங்களில் தேக்குவதன் மூலமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாகவும் நீர்த்தேக்கங்களாகவும் உருவாக்கிட வழிவகை செய்ய வேண்டும். இதனால் மழை நீர் சேமிக்கப்படும் மேலும் நிலத்தடி நீர் உயரும் கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் மீன் வளர்ப்பிடமாக மாற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்திடவும் தேக்கி வைக்கப்பட்ட மழை நீரை பயன்படுத்திட விவசாயிகள் முப்போகம் விவசாயம் செய்திடவும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும் மழைக்காலங்களில் வரும் உபரி நீரை தேக்குவதன் மூலமாக கோடைக்காலங்களில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை தவிர்த்திட இயலும். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக முதல்வரிடம் ஒப்படைத்து சிறப்பு நிதி பெற்று திட்டத்தை செவ்வனே செய்து தர மாவட்டத்தில் உள்ள வருங்கால சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் சொத்து போல இருக்கும் எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.கரும்பு பயிர் சாகுபடி செய்து வந்த விவசாயிகளின் விவசாய நிலங்களை மீட்டெடுத்து அதில் விவசாயிகளை நவதானியங்களை வயலில் தெளித்து பிறகு ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அதனை வயலில் மடக்கி உழுவதன் மூலமாக இயற்கை முறையில் மலட்டுத்தன்மை உள்ள வயல்களை மீட்டெடுக்க இயலும் அதற்குரிய நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் வேளாண்துறை மூலம் நடவடிக்கைகள் எடுத்திட விவசாயிகள் நல்ல பலன்களை பெற முடியும்.

4.கொள்ளிடத்தில் திருமழபாடி அருகே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டி வைத்தியநாதன்பேட்டை இடையே போக்குவரத்துக்கு மேம்பாலம் கட்டிட தஞ்சை திருவையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் வேளாண் உற்பத்தி பொருட்களான வெங்காயம், கடலை, உளுந்து, பச்சைப்பயறு, காய்கறிகளை விரைவாக சந்தைக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பாக இருக்கும்.

5. மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களிலும் உள்ள சட்டர்களை ஆய்வு செய்து முழுமையாக சீரமைக்க தரமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மேலும் 6.கரைவெட்டி ஏரி 1100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இதில் நான்கு புறமும் கரை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வடக்குப்புறமாகவும் வடக்கிலிருந்து தெற்கு புறமாக கரையின் மேற்குபுறமாக பாதியில் நிற்கிறது அதனை முழுமையாக பூர்த்தி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

6.கரைவெட்டி ஏரி 1100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இதில் நான்கு புறமும் கரை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வடக்குப்புறமாகவும் வடக்கிலிருந்து தெற்கு புறமாக கரையின் மேற்குபுறமாக பாதியில் நிற்கிறது அதனை முழுமையாக பூர்த்தி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 Aug 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  2. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  3. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  4. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  5. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  6. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  7. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  8. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது