/* */

ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது

ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்ததாக 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
X

பட விளக்கம் : பரமத்திவேலூரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை 7 பேர் கொண்ட கும்பல் கைது

நாமக்கல்,

ப.வேலூரில் போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், பரமத்தி வேலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றங்கரையில் நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியில் 7 பேர் கொண்ட கும்பலை பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த கும்பலிடம் 10 போதை மாத்திரைகள், 10 போதை ஊசிகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம், 2 டூ வீலர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 7 பேர் கொண்ட கும்பலை பரமத்தி வேலூர் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், பொத்தனூரை சேர்ந்த நித்தீஷ், முகமது உசேன், கோகுல்ராஜ், கூடச்சேரி சிதம்பரம், ப.வேலூர் கர்த்திகேயன், செல்வம், நல்லியம்பாளையத்தை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. குறிப்பாக சிதம்பரமும், பசுபதியும் போதை மருந்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்ததும் தெரியவந்தது. இருவரும் நாக்பூரில் போதை மருந்துகள், போதை ஊசிகளை ஆன்லைன் மூலம் ஒரு மாத்திரை ரூ.30 க்கும் வாங்கி இங்கு ரூ.900 த்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை ஊசி, போதை மாத்திரைகள், ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 டூ வீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 May 2024 10:45 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...