/* */

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடிக்கப்பட்டன.

HIGHLIGHTS

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
X

அரியலூர் அடுத்த எருத்துக்கரான்பட்டி ஊராட்சியில்,  திட்டக்குடி சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரங்கள்.


அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையோரத்தை ஆக்கிரமித்து 5 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வந்தனர். உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, நீர்நிலைகள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது.

அதன்படி, அரியலூர் எருத்துக்காரன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையோரத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு, சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறையினர் அறிவிப்பு கொடுத்தும் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரின் முன்னிலையில் மேற்கண்ட சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகளை 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு நேற்று இடிக்கப்பட்டன. வீடுகள் இடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டனர்.

Updated On: 29 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா