/* */

இலங்கை ஜனாதிபதி ரணில் அவசர அறிவிப்பு

இலங்கையில் பல மாதங்களாகவே நெருக்கடியான நிலையே நீடித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

இலங்கை ஜனாதிபதி ரணில் அவசர அறிவிப்பு
X

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே


இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக அவரது தம்பி ராஜபக்சேவும் இருந்தனர். நாடானது பெருத்த பொருளாதார வீழ்ச்சியைக் கண்டதால் விலைவாசி விண்ணைவிட அதிகமானது. இதனால் சாதாரண நடுத்தர குடும்பங்கள் பிழைப்பதே கடினமாகிவிட்டது. அதுவும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு. கிடைத்தாலும் அதிக விலை கொடுத்தே வாங்கவேண்டிய நிர்ப்பந்தம்.

இதனால் பல குடும்பத்தினர் அகதிகளாக தமிழகம் நோக்கி கள்ள படகில் வந்து சேர்ந்தனர். அவர்கள் இங்கு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இலங்கையில் இதுவரை கண்டிராத மக்கள் புரட்சியும் வெடித்து பூகம்பமாகிவிட்டது. கடைசி கட்டமாக ராஜபக்சேவும், அவரது அண்ணன் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகவேண்டும் என அங்குள்ள மக்கள் போர்க்கொடி துாக்கியதோடு கட்டுப்பாடுகளை மீறி ஜனாதிபதி மாளிகையினுள் சென்று அங்கும் போராட்டம் நடத்தியது தனிக்கதை.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவரும் கோத்தபய ஆதரவாளர் என முத்திரை குத்தி அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் தற்போது ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் செப்டம்பர் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். செயலகத்தில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிர்வாகிகளை சந்தித்தபோது இதனை அறிவித்துள்ளார்.

இந்த இடைக்கால வரவு செலவு திட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு அரசு ஊழியர்கள் தங்களுடைய சுதந்திரமான சேவைகளை நாட்டுக்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த 22 ம் திருத்தச்சட்டமானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு தற்போதுள்ள நிலையில் இதுகுறித்து பொதுவான இணக்கப்பாட்டை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்எனவும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Aug 2022 3:12 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி