/* */

திருவண்ணாமலை; மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

Grievance Redressal Committee - திருவண்ணாமலை மற்றும் செய்யாற்றில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை; மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயி தற்கொலை முயற்சி
X

குறை தீர்வு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்.

Grievance Redressal Committee - திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார்.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினார். மேலும் அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கடந்த வார மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மனு அளிக்க வந்த பொதுமக்களை, போலீசார் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

வெம்பாக்கம் தாலூகா எடப்பாளையம் பகுதியை சேர்ந்த துளசிப்பிள்ளை என்ற விவசாயி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கடந்த 2015-ம் ஆண்டு வெம்பாக்கம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 23 பவுன் நகை அடமானம் வைத்ததாகவும், 2017-ம் ஆண்டு நகைக்கடனை புதுப்பிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர். அவர் அங்கு சென்று பார்த்தபோது 23 பவுன் நகையில் 15 பவுன் நகை மட்டுமே கணக்கில் காட்டி புதுப்பிக்க கூறியுள்ளனர். மீதமுள்ள 8 பவுன் நகை குறித்து கேட்டதற்கு வங்கியில் முறையான பதில் அளிக்கவில்லை.

தனது நகையை மீட்டு தரக்கோரி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியத்தை சேர்ந்த நல்லூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், கொட்டம்குப்பம், பெரியங்குப்பம், ராமசந்திரம், செய்யாறு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல் வினியோகத்திற்கு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மீண்டும் நல்லூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செய்யாறு

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தரக் கோரி 9 பேரும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி 4 பேரும், நிலம் திருத்தம் கோரி 3 பேரும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரி 2 பேரும், அரசு வேலை வழங்கக் கோரி 3 பேரும், முதியோா் உதவித்தொகை கோரி 4 பேரும், பெயா் திருத்தம் கோரி 2 பேரும், பட்டா ரத்து, இலவச வீடு கோரி தலா ஒருவா், இதர துறை மனுக்கள் 34 உள்பட மொத்தம் 66 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jan 2023 10:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க