/* */

தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்... கட்டிப்போட்டு தாக்குதல் நடத்திய மக்கள்

Tiruvannamalai Today Live News-திருவண்ணாமலையில் மரம் அறுவை இயந்திரம் திருடிய நபரை கடை உரிமையாளரும், பொதுமக்களும் சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்... கட்டிப்போட்டு தாக்குதல் நடத்திய மக்கள்
X

திருட முயன்ற இளைஞர்.

Tiruvannamalai Today Live News- திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் மத்தலங்குளத் தெரு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. காலை முதல் இரவு வரை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும்.

இங்கு உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல் வந்து யாருக்கும் தெரியாமல் மரம் அறுக்கும் சிறிய எந்திரத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அந்த நபர் அதே கடைக்கு வந்துள்ளார். ஏற்கனவே கண்காணிப்பு கேமராவில் முகத்தை பார்த்து வைத்திருந்த கடைக்காரர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து கட்டிப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர் போளூர் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் அடித்து உதைத்ததில் அந்த நபருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Jun 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்