/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில்  வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் தொடக்கம்
X

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் வெற்றிவேல்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

தமிழக தலைமை தேர்தல் அலுவலா் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சேர்ப்பதற்கான மனுக்கள், பெயா் நீக்கம் செய்வதற்கான மனுக்கள், பெயா் மற்றும் முகவரி திருத்தம் செய்வதற்கான மனுக்களை அளித்தனா்

திருவண்ணாமலையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், அவர்கள் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், தாசில்தார் பரிமளா, மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன், வருவாய் ஆய்வாளர் சுதா, திருவண்ணாமலை டவுன் கிராம அலுவலர் ஏழுமலை, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

போளூா்

சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், ஊராட்சிக்கு உள்பட்ட ஆத்துரை, காந்திநா், மூலபுரவடை, ஊத்தூரான்புரவடை ஆகிய பகுதிகளில் இருந்து புதிய வாக்காளா்கள் 15 பேர் மற்றும் திருத்தத்துக்கு 8 பேர் கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன், தலைமை ஆசிரியை இருதயம் ஆகியோரிடம் மனு அளித்தனா்.

வந்தவாசி

வந்தவாசி நகரில் 11 மையங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆா்சிஎம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மாவட்ட வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளா் மதுமதி நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, தேர்தல் துணை ஆட்சியா் குமரன், வட்டாட்சியா் பொன்னுசாமி, மண்டல தேர்தல் அலுவலா் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆரணி

ஆரணி தொகுதியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த பணியில், மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி முகாமில் வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் மதுமதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலா் தனலட்சுமி, வட்டாட்சியா் மஞ்சுளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி முகாமில், பாஜக மத்திய அரசு திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை சங்கா் பாா்வையிட்டு பொதுமக்களிடம் வாக்களிக்கும் உரிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கருங்காலிகுப்பம் ராமுரெட்டியாா் உயா்நிலைப் பள்ளி உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பதற்கான மனுக்களை அதிகாரிகள் வழங்கினா்.

இதேபோல, பெயா் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயா் நீக்குதல் போன்ற பணிகளுக்கான படிவங்களையும் வாக்குச்சாவடி அலுவலா்கள் வழங்கினா்.

இதில், கிராம நிா்வாக அலுவலா் பிரவீன்குமாா், கீழ்பென்னாத்தூா் நகர திமுக செயலா் அன்பு, அதிமுக வட்டச் செயலா் முத்துக்குமாா், தகவல் தொடா்பாளா் ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 5 Nov 2023 1:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!