/* */

மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சுற்றிலும் மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது
X

பொக்லைன் இயந்திரம் மூலம்  ஆக்கிரமிப்புகள் அகற்றும் நகராட்சி அதிகாரிகள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைச் சுற்றிலும் உள்ள மாட வீதியை முற்றிலுமாக சீரமைத்து கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்படும். மேலும், சாலையின் இருபுறமும் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி, புதைவட மின் பாதையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, கோவிலில் துவங்கி மாட வீதி முழுவதும் சீரமைக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. அதற்காக கடந்த மாதம் சாலை அளவீடு உள்ளிட்ட ஆய்வு பணிகள் நடந்தன.

அதன் தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட துவங்கினர். மாடவீதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் கடந்த வாரமே தங்கள் கடைக்கு முன் உள்ள தகர கொட்டகைகள் மற்றும் கை வண்டிகளை அகற்றினர்.

கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

Updated On: 23 July 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க