/* */

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் சாலைகள் சீரமைப்பு; கலெக்டர் ஆய்வு

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் சாலைகள் சீரமைப்பு; கலெக்டர் ஆய்வு
X

சாலை சீரமைப்பு பணிகளை  ஆய்வு செய்த  கலெக்டர்,  எஸ்பி 

திருவண்ணாமலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் திருப்பதிக்கு இணையான சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22-யின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரையில் உள்ள சாலையில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

சிமெண்டு சாலை அமைக்கும் பணியையொட்டி பே கோபுரத் தெரு, பெரிய தெரு மூடப்பட்டு இப்பணி முடியும் வரை அப்பகுதி சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு, கல்நகர், ஆடுதொட்டி தெரு, திருகோவிலூர் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் சிமெண்டு சாலை போடும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு அதிகாரிகள், சிமெண்டு சாலையானது 100 மீட்டர், 100 மீட்டராக அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணி வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு முறையாக கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தினர்.

மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ள பகுதிகளில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும் உத்தரவிட்டார்.

அப்போது திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 Jun 2023 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’