/* */

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் குடும்பம் தான் முக்கியம் பிஜேபிக்கு நாடுதான் முக்கியம்; ராஜ்நாத் சிங் பேச்சு

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் குடும்பம் தான் முக்கியம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

HIGHLIGHTS

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் குடும்பம் தான் முக்கியம் பிஜேபிக்கு நாடுதான் முக்கியம்; ராஜ்நாத் சிங் பேச்சு
X

பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து திருவண்ணாமலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கின் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் காமராஜர் சிலை அருகே தொடங்கிய இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி திருமஞ்சன கோபுர வீதி, திருவுடல் வீதி, தேரடி தெரு வழியாக காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது

ரோடு ஷோ நடைபெற்ற வீதிகளில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மலர் தூவி வரவேற்றனர்.

காந்தி சிலை அருகே சிறப்புரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் பேசுகையில்;

உலகிலேயே தமிழ் மொழி சிறந்த மொழி அழகான மொழி. ஆனால் அதை என்னால் பேச முடியவில்லை என மனம் வருத்தமாக உள்ளது. உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது இந்த தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் நிச்சயம் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

மேலும் இந்தியா கூட்டணி வடக்கும் தெற்கும் பிரித்து நம் நாட்டை ஆள பார்க்கிறது.

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து திசைகளிலும் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆன்மீகத்தின் அடிப்படையிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் உலககெங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு அமையங்கள் உருவாக்குவதாக அறிவித்துள்ளோம். சுதந்திரத்துக்கு பிறகு பெரும்பாலான அரசாங்கங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு, தேவையான வேகத்திலும் செயல்படவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு வந்ததில் இருந்து, நாடு வளர்ச்சிப் பாதையில் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் விளைவுகள் இப்போது ஒவ்வொன்றாக வெளியில் வரத் தொடங்கியுள்ளன.

5ஜி இணைப்பு உள்ள சில நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி 6ஜி-க்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளார். உலகின் மிக மலிவான மொபைல் டேட்டா சேவை, இந்தியாவில் கிடைக்கிறது. 2014-ம் ஆண்டில் பிராட்பேண்ட் இணைப்பு 20 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைலில் ஏற்பட்ட புரட்சியின் விளைவு இன்று சாமானிய குடிமகன் சிறிய பரிவார்த்தனைகள் கூட யூபிஎப் மூலம் டிஜிட்டல் முறையில் செய்து வருகிறார். மார்ச் 2024-ல், ஒரு மாதத்தில் சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள 1,344 கோடிக்கு அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாட்டில் நடந்துள்ளன.


தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழலை திமுக கொடுத்துள்ளது. தேசம் முதலில் என பாஜக சொல்கிறது. ஆனால், திமுக குடும்பமே முதலில் என்கிறது. ஊழலுக்கு திமுகவும், காங்கிரஸ் காப்புரிமை பெற்றுள்ளது. ஒட்டு மொத்த திமுக குடும்பமும் சேர்ந்து தமிழகத்தை சூறையாடுகிறது.

இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளதா என்றால் பதில் இல்லை. காங்கிரஸ் - திமுக இண்டியா கூட்டணி இந்தியாவின் தேச பாதுகாப்பை பலப்படுத்தப் போவதுமில்லை. தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி நீடிக்கப் போவதுமில்லை. உங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை நீங்கள் வீணடிக்க கூடாது, உங்களின் பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் அஸ்வத்தாமனை வெற்றி பெறச் செய்யுங்கள் என மதிய அமைச்சர் ராஜநாத் சிங் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கிஷோர் குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள், இந்து முன்னணி தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 April 2024 1:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...