/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக். 17-ந் தேதி முதல் வாக்காளர் பெயர் சேர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக். 17-ந் தேதி முதல் வாக்காளர் பெயர் சேர்ப்பு
X

அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1-1-2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணையினை அறிவித்து உள்ளது.

அதன்படி வாக்குச்சாவடி நிலைய அலுவலர் வருகிற 21-7-2023 முதல் 21-8-2023 வரை வீடு வீடாக வந்து வாக்காளர் பட்டியலை சரிப்பார்ப்பார்கள். வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள மங்கலான, மோசமான தரமற்ற படங்களை மாற்றி நல்ல தரமான புகைப்படங்களை வருகிற 22-8-2023 முதல் 29-9-2023 வரை செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 17-10-2023 அன்று வெளியிடப்படும்.

17-10-2023 முதல் 30-11-2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்டிகளில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பம் அளித்தவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி 26-12-2023-க்கும் முடிவடையும். இதைத் தொடர்ந்து 5-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 18 முதல் 25-க்கும் கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

1-1-2024, 1-4-2024, 1-7-2024 மற்றும் 1-10-2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களுக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.

எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் விரைந்து இப்பணியினை முடித்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2023 1:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!