/* */

தமிழ்நாட்டில் சரியான நிலையில் சட்டம் ஒழுங்கு: அமைச்சர் வேலு

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கின்ற காரணத்தினால் தான் வெளிநாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் சரியான நிலையில் சட்டம் ஒழுங்கு: அமைச்சர் வேலு
X

கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு .

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கின்ற காரணத்தினால் தான் வெளிநாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நேற்று மாலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்திகேயன், அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வரவேற்றார். கலெக்டர் முருகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி 6 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கண்காணிப்பு கேமிராக்கள் என்பது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்லாமல் நல்ல காரியங்களுக்கும் பயன்படுகிறது. திருவண்ணாமலைக்கு ஆன்மிக மக்கள் அதிகளவில் வருகை தருவதால் இந்த கண்காணிப்பு கேமிராக்கள் காவல் துறைக்கு மிக அதிகளவில் பயன்படுகின்றது.சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா உலக அளவில் அதிகமாக பயன்படுத்தும் பகுதிகளில் முதல் இடத்தை டெல்லியும், 2-ம் இடத்தை லண்டனும், 3-ம் இடத்தை சென்னையும் பெற்று உள்ளது.

நாணயமாக செயல்படும் தராசை போன்று தமிழகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது.

மனிதர்களுக்கு இயற்கையாக 2 கண்கள் இருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் 3-வது கண்ணாக உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக அமைந்து உள்ளது.

சட்டம், ஒழுங்கு சரியாக பாதுகாக்கப்பட்டால் தான் தொழில் துறை முன்னேற முடியும். தொழில் துறை முன்னேறினால் பொருளாதாரம் கிடைக்கும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கின்ற காரணத்தினால் தான் வெளிநாட்டு முதலாளிகள் தொழில் தொடங்க இங்கே வருகின்றனர்.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு காவல்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது காவல் துறைக்கு என்று 3 ஆணையம் அமைத்து இருந்தார். அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது காவல் ஆணையம் அமைத்து உள்ளார். ஸ்கார்ட்லாந்து போலீசுக்கு இணையாக தமிழக போலீசாரை கொண்டு வருவதற்காக இந்த ஆணையத்தை முதல்- அமைச்சர் அமைத்து உள்ளார். காவல் துறையினர் உங்களுக்கு வேண்டிய உதவிகளை இந்த ஆணையத்தில் தெரிவித்து பயன்பெறலாம்.

எல்லையில் நாட்டை காப்பாற்ற ராணுவ வீரர்கள் எப்படி 24 மணி நேரமும் உழைத்து கொண்டு இருக்கின்றார்களோ அது போல தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற போலீசார் 24 மணி நேரமும் உழைத்து கொண்டு இருக்கின்றனர். காவல்துறைக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு இருக்கும் திரவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கிரி, சரவணன், அம்பேத்குமார், ஜோதி, மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், மாநில கைப்பந்து சங்க துணைத் தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், உள்பட ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரமுகர்கள், காவல் துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 April 2023 2:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்