/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பாக தொடங்கியது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
X

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் ஏராளம் பக்தர்கள் வழிபட்டனர். நேற்று அதிகாலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் 108 முறை கம்பத்து இளையனார் சன்னதியை சுற்றி வந்து கடன் செலுத்தி வழிபட்டனர்.

அதேபோல் வட வீதி சுப்பிரமணியர் திருக்கோயில், சோமாஸ்பாடி முருகன் கோவில், வேட்டவலம் சுப்ரமணியர் திருக்கோயில், ஆகிய பகுதிகளில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது.

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி கோயிலில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் உற்சவா் சுவாமிக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த சுவாமியை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள தம்டகோடி திருமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் மகா கந்த சஷ்டி சூரசம்ஹா பெருவிழா கொடியேற்ற உற்சவத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கோயில் கொடி மரத்துக்கு புனிதநீா் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் வேல் பொறித்த கொடியை அா்ச்சகா்கள், சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தா்கள் முன்னிலையில் ஏற்றி வைத்து, சிறப்பு தீபாராதனை காட்டி கந்த சஷ்டி விழாவை தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து, பக்தா்கள் உற்சவ மூா்த்திகளை பல்லக்கில் சுமந்து, அரோகரா கோஷமிட்டு, ஆடி பாடியபடி கோயில் வளாகத்தை வலம் வந்தனா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து தினசரி அருணகிரிநாதருக்கு நடன காட்சி, பிரம்மாவுக்கு உபதேசம், சிவபூஜை செய்தல், சக்திவேல் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒரு வாரம் நடைபெறவுள்ளது.

வருகிற 18-ஆம் தேதி சூரசம்ஹாரமும், 19-ஆம் தேதி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முருக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனா்.

Updated On: 14 Nov 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்