/* */

யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வனத்துறை கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத. அதற்கு கால அவகாசம் வனத்துறை கொடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறை வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி பேசுகையில், தமிழக அரசு மற்றும் வனத்துறையும் யானை வழித்தடங்களை கண்டறிந்து வலசைப் பாதை ஏற்படுத்த வேண்டும் என்று 161 பக்கங்களுக்கு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டதை விவசாயிகளும் மற்றும் மலைவாழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் விளம்பரங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் எவ்வாறு ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிடலாம்? அந்த அறிக்கை மலைவாழ் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்படி புரியும்? 2024 ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தமிழகத்தில் சுமார் 42 வழித்தடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, போளுவம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வனசரக பகுதிகளுக்கு உட்பட்ட 520 ஏக்கர் மேல் உள்ள விவசாயி நிலங்களை யானை வழித்தடத்திற்காக கையகப்படுத்துவது ஒருதலை பட்சமாக வனத்துறையினர் செயல்பட்டு வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள 557 கிராமங்கள் உட்பட கோவை மாவட்டத்தில் 57 கிராமங்கள் யானை வழித்தடமாக வனத்துறையினர் அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் யானை வலசை பாதையில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் சுமார் தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளது. வனப்பகுதியில் சொகுசு விடுதி, கல்வி நிறுவனம் போன்றவற்றை வனத்துறையினர் அகற்றாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. சுற்றறிக்கையை ஐந்து நாட்களில் படித்துவிட்டு பதில் கூற வேண்டும் என்று வனத்துறை கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத. அதற்கு கால அவகாசம் வனத்துறை கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Updated On: 16 May 2024 9:30 AM GMT

Related News

Latest News

 1. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 2. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 3. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 4. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்
 5. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 6. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 7. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 8. நாமக்கல்
  அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
 9. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 10. கோவை மாநகர்
  மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை