/* */

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு சக்தி என்ற திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்ஸ் டாப் சென்டர் என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் அமைந்துள்ளது. இதில் 24 மணி நேரம், அனைத்து நாட்களும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ உதவி சட்ட, உதவி காவல்துறை, உதவி உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும் . இச்சேவை மையத்தில் பணிபுரிய பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வழக்குப் பணியாளர்கள் பணியிடம் ,மூன்று மகளிர் மட்டும், சமூகப்பணி ,ஆலோசனை, உளவியல், சமூகவியல், மனநலம் இந்த பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பணியில் குறைந்தபட்சம் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும். அத்தகைய சூழலிலோ அல்லது இது தொடர்பான சூழல்களில் ஒரு வருடம் ஆலோசகர் பணியில் இருப்பது விரும்பத்தக்கதாகும்.

மேற்கு குறிப்பிடப்பட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கணினி பயிற்சி பெற்றவர்களுக்கும் உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் மாதம் 15,000 மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2024, ஆகும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம் ,திருவண்ணாமலை. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Jan 2024 1:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!