/* */

கிரிவலப் பாதையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Girivalam Route -திருவண்ணாமலை கிரிவலம் பாதை மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கிரிவலப் பாதையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

கிரிவலப் பாதையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டனர்.

Girivalam Route -திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்திடவும் கிரிவலம் செல்லவும், புகழ்பெற்ற மகான் சேஷாத்திரி ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ஆசிரமம் ஆகியவற்றிற்கும் தினசரி பக்தர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழா சித்ரா பௌர்ணமி போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை மேம்படுத்துவதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி பக்தர்கள் இரவு தங்கும் விடுதிகளிலும், நெடுஞ்சாலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் இலவச பக்தர்கள் ஓய்வு அறைகளிலும், ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் கட்டிடங்களிலும், இந்து சமய அறநிலையத்துறையின் கோவிலுக்கு சொந்தமான சன்னியாசிகள் தங்கும் வளாகத்திலும் கூடுதல் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிரிவலப் பாதையில் தேவையான இடங்களில் காவல்துறையின் மூலம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரண்யா தேவி, உதவி ஆணையாளர் திருக்கோவில் ராஜேந்திரன், மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Sep 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்