/* */

அருணை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா

தன்னம்பிக்கை, தைரியத்தோடு பொறியியல் படிப்பை தடையின்றி முடித்தால் வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும் என பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் அறிவுரை

HIGHLIGHTS

அருணை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா
X

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது

திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி சார்பில் இன்று காலை இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் துணைத் தலைவர் எ.வ.வே. குமரன் முன்னிலை வகித்தார்.

கல்லூரியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இன்போசிஸ் துணைத்தலைவர் சூரியநாராயணன் , மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்போசிஸ் துணைத்தலைவர் பேசுகையில் இந்த கொரோனா காலகட்டத்தில் பொறியாளர்களின் பங்கு மிகப்பெரியது எனவும் சமுதாயத்தில் பொறியாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. பொறியாளர்களின் வேலைவாய்ப்பு வரும் காலங்களில் மிக அதிகமாக தேவைப்படும் எனவும் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.

ஈரோடு மகேஷ் பேசுகையில் பொறியியல் முடித்துவிட்டு புதியதாக ஒரு கண்டுபிடிப்பையும் யார் யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களுக்காக இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. இப்படி இந்த உலகம் காத்துக் கொண்டிருக்கிற ஒரு நபராக நமது அருணை பொறியியல் கல்லூரியின் பொறியாளர் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. விவசாயத் துறை, மருத்துவத் துறையில் தற்போது பொறியாளர்களின் அதீத வளர்ச்சியை காண முடிகிறது. தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பொறியியல் படிப்பை தடையின்றி முடித்தால் வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி விழாவை சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.

Updated On: 25 Oct 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்