/* */

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்
X

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தினர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

மகா தீபத்திற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250-ம், அரை கிலோவிற்கு ரூ.150-ம், கால் கிலோவிற்கு ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.

பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்திற்கு கோவில் நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப 'மை' பெற்றுக் கொள்ளலாம்.

Updated On: 31 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!