/* */

கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும்போது கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் ஆலோசனை கூட்டத்தில் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை
X

கியாஸ் ஏஜென்சி மற்றும் நுகர்வோர் ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேஸ் ஏஜென்சி மற்றும் நுகர்வோர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்கள் வைதேகி, பாலமுருகன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழங்குடியினருக்கு பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச கேஸ் இணைப்பு ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

செங்கம் பகுதியில் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் நீப்பத்துறை, வெள்ளாளம்பட்டி, ஆனந்தவாடி, தண்டராம்பட்டு, குறும்பம்பட்டி போன்ற கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினரும் இத்திட்டத்தில் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேஸ் ஏஜென்சி வினியோகம் செய்யும் நபர்கள் நுகர்வோரிடம் ரூ.40 முதல் ரூ.50 வரை கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். கிராமங்களில் வீட்டுக்கு வந்து கியாஸ் சிலிண்டர் தருவதில்லை. ஊரின் எல்லையிலேயே நிறுத்தி விட்டு நுகர்வோரை வந்து பெற்றுக் கொள்ள கூறுகிறார்கள் என்று நுகர்வோர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து உதவி கலெக்டர் கூறுகையில், சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் நுகர்வோரிடம் அதன் பில் தொகைக்கு மேல் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதுகுறித்து தொடர்ந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களில் கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் வரவில்லை என்றால் தொடர்ந்து 3 நோட்டீசுகள் அளிக்கப்படும். 3-வது நோட்டீசுக்கு மேல் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் அரசு அலுவலர்கள், கியாஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர்கள், நுகர்வோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 May 2022 1:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க