/* */

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுமாறு கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்

HIGHLIGHTS

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுமாறு ஆட்சியர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும், அரசு உத்தரவின் படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளான வருகிற 10-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலிலேயே பாதுகாப்பான முறையில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. பண்டிகை தொடர்பான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாது முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்

Updated On: 7 Sep 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க