/* */

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்ததன் காரணமாக கோயில் பிரகாரங்கள் பளிச்சென புதுப்பொலிவு பெற்றுள்ளன

HIGHLIGHTS

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி
X

அண்ணாமலையார் கோவிலில் தூய்மைப்பணி நடைபெற்றது

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இந்நிலையில், இன்று முதல் மீண்டும் தடை தொடர்வதால் கோயில் பிரகாரங்களை ஒட்டுமொத்தமாக தூய்மைப்படுத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் கடந்த 3 நாட்களாக ஒட்டுமொத்த தூய்மைப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, கோயில் தங்க கொடிமரம், முதல் பிரகாரம் தொடங்கி 5ம் பிரகாரம் வரையுள்ள சன்னதிகள் ஆகியவற்றை ஊழியர்கள் தூய்மை செய்தனர். அதனால், கோயில் பிரகாரங்கள் பளிச்சென புதுப்பொலிவு பெற்றுள்ளன. மேலும், தரிசனத்துக்கு பக்தர்கள் செல்லும் வரிசையில் உள்ள தடுப்பு கம்பிகள், கைப்பிடிகள் போன்றவை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.

Updated On: 4 Aug 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  4. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  6. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  7. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  8. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  9. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  10. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...