/* */

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.94 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.94 கோடி செலுத்தி இருந்தனர்.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.94 கோடி
X

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.94 கோடி , பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சோந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி காலையில் தொடங்கி 31-ந் தேதி காலையில் நிறைவடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, ஆவணி மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன

இதில், ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரொக்கம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதையடுத்து, ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

Updated On: 23 Sep 2023 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க