/* */

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி

8 மணி நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

HIGHLIGHTS

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி
X

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலில் படுதோல்வி. இதுவரை 30க்கும் மேற்பட்ட யூனியன் கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணியினர் முன்னிலை.

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 9 மையங்களில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில் இதுவரை பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 12 மாவட்ட கவுன்சிலர்கள், 122 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 204 கிராம ஊராட்சி தலைவர்கள், 1936 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2069 பதவிகள் உள்ளன. இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே வேட்பாளர்கள் கட்சி சின்னத்துடன் போட்டியிட்டுள்ளனர்.

எனவே அந்த இரண்டு பதவிகளுக்கும் அதிமுக - பாஜக, திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எண்ணப்பட்ட முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை விட பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். பல்வேறு இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் முன்னணியில் உள்ளனர். அதேபோல் இரவு 8 மணி நிலவரப்படி 22 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

அதேபோல் ஐந்து இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். ஆனால் அதிமுக வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்தத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் சூழல் நிலவி வருகிறது. அதே சமயம் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து ஒன்பது மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இதுவரை ஒரு இடங்களில் கூட முடிவுகள் அறிவிக்கவில்லை. ஆனால் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கனகராஜ், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட ஜெகதீஷ் போன்ற முக்கிய திமுக நிர்வாகிகள் முன்னணியில் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதிவிகளுக்கு மட்டும் விரைவில் முடிவு அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிய இன்னும் பல மணி நேரம் ஆகும். என்பதால் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு பகலாக அலுவலர்கள் வாக்குகளை எண்ணி வருகின்றனர்.

Updated On: 12 Oct 2021 5:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது