/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைதான 4 பேர் இன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொச்சிக்குளம் கல்லறை தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 6 ஆம் தேதி சாத்தான்குளம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா மகன் ரேவந்த்குமார் (27) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் சாத்தான்குளம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் சுடலை மகாலிங்கம் (28) மற்றும் சிலரை சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

தாளமுத்துநகர் பூபாண்டியபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து (41), முருகன் (29) மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37) ஆகியோரை முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் சாலையப்பன் (38) கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையெடுத்து, அவரை தாளமுத்துநகர் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, கடந்த மாதம் 13 ஆம் தேதி தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வமுருகன்னை தாளமுத்துநகர் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த இரு வழக்குகளிலும் தொடர்புடைய சாலையப்பன் மற்றும் செல்வமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி. அய்யப்பபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி செல்வமுருகேஸ்வரி (50) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (39) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளை வழக்கில் கைதான செந்தில்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையெடுத்து, கொலை வழக்கில் கைதான சுடலை மகாலிங்கம், கொலை முயற்சி வழக்கில் கைதான சாலையப்பன், செல்வமுருகன், திருட்டு வழக்கில் கைதான செந்தில்குமார் ஆகிய நான்கு பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், நான்கு பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புகத் காவல் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 233 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Updated On: 10 Nov 2022 5:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!