/* */

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய மாசி மக பெருவிழா தேரோட்டம்

2 பெரிய தேர்கள் அடங்கிய இந்த திருத்தேரோட்டத்தில் ஒரு தேரில் காசிவிஸ்வநாதர் சுவாமியும், உலகம்மாள் சுவாமியும் இணைந்து வீதி உலா வருகின்றனர்

HIGHLIGHTS

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய மாசி மக பெருவிழா தேரோட்டம்
X

: தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய மாசி மகப் பெருவிழா தேரோட்டம் பொது மக்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்ட போது எடுத்த படம்.

வரலாற்று சிறப்புமிக்க காசிவிஸ்வநாதர் கோயிலில் நடைபெற்று வரும் திருத்தேரோட்டத்தில் ஏராளனமான பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்றான பாண்டியமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வருடம் தோறும் மாசி மக பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான மாசி மக பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சூழலில், நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதனை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்ற சூழலில், சப்பர வீதி உலாவும் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 7-ம் திருநாளை முன்னிட்டு நடராஜ பெருமாள் எழுந்தருளிய தாண்டவ தீபாதாரணையும், புஷ்பாஞ்சலி நிகழும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிலையில், 9-ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.

2 பெரிய தேர்கள் அடங்கிய இந்த திருத்தேரோட்டத்தில் ஒரு தேரில் காசிவிஸ்வநாதர் சுவாமியும், உலகம்மாள் சுவாமியும் இணைந்து வீதி உலா வருகின்றனர்.மற்றொரு, தேரில் நடராஜப்பெருமாள் வீதி உலா வந்து கொண்டிருக்கின்றனர். இந்த தேரை தற்போது ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி ரத வீதியில் இழுத்து வரும் சூழலில், பக்தர்கள் பக்தி கோசமிட்டபடி தேரை இழுத்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 March 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்