/* */

தென்காசி மாவட்டத்தில் 7 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தென்காசி மாவட்டத்தில் 7 மணி நிலவரப்படி 71.06% சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 7 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
X

பட விளக்கம்: சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வாக்களித்த போது எடுத்த படம்

தென்காசி மாவட்டத்தில் 7 மணி நிலவரப்படி 71.06% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தொடங்கிய வாக்குப்பதிவு- 1,743 வாக்குசாவடி மையங்களில் 7 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 2,500 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

18-ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் ஒன்றன்பின் ஒருவராக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,743 வாக்குச்சாவடி மையங்களில் 6,972 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவானது காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குப்பதிவு மையங்களில் உள்ள அரசியல் கட்சி முகவர்கள் முன்பு இயந்திரத்தில் செயல்பாடுகள் குறித்து உறுதி செய்ய டம்மி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி முகவர்களின் ஒப்புதலை தொடர்ந்து, காலை 7 மணி முதல் வாக்கு பதிவானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் மொத்தமுள்ள 1,743 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக 88 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் மற்றும் 1,250 போலீசார், 293 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், 650 ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், சிறப்பு காவல் படையை சேர்ந்த 80 வீரர்கள் மற்றும் 220 கேரளா காவல்துறையினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 2,493 பேர் வாக்கு சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வாக்குப்பதிவின் போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் காவல்துறையினர் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சுமார் 858 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 11 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 3 வரை எந்தவிதமான அசம்பாவிதங்கள் இல்லாமல் 50.71% வாக்குப்பதிவாகி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சுரண்டை நகரப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா செங்கோட்டை அரசு பள்ளியிலும் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.

தொடர்ந்து, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் ஆகியோரும் தங்களது வாக்கினை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 April 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  4. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  8. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  9. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  10. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி