/* */

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு.

HIGHLIGHTS

பெண்கள்,  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு
X

தென்காசி தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு(IUCAW) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் நேற்று தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் தங்களுக்கு பள்ளியிலோ வெளியிலோ எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் தெரிவிக்க வேண்டும் எனவும், முன்பின் தெரியாத நபர்களிடம் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் பேச வேண்டாம் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதேபோல் தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் காவல் துறையினர் இணைந்து புல்லுக்காட்டு வலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கும் தொடர்பு எண் (1098,181,14417,155260) மற்றும் ஆபத்து நேரத்தில் காவல்துறையினரின் உதவியை பெற உதவும் காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 25 Dec 2021 1:23 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து