/* */

நீர்நிலைகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க மீட்புப்படை காவலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மீட்புப்படை காவலர்களை எஸ்பி தீபாசத்தியன் நியமித்துள்ளார்

HIGHLIGHTS

நீர்நிலைகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க மீட்புப்படை காவலர்கள்
X

இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்தியன் 

கடந்த சில நாட்களாக தமிழகம். மற்றும்ஆந்திராவில் தொடர்மழை பெய்து வருகிறது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னையாறு, பாலாறு ஆகிய வற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏரிகள்மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. எனவே அவற்றில். உயிர்சேதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதில், ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளம் செல்லும்போது தரைபாலங்களின் மேல் மக்கள் நடப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதையும் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். சாலைப்பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும். எனவே அதிகாலை வேளையில் , இருட்டான நேரத்தில் வெளியே செல்லுவதைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்,எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் , ஆளிநர்கள் 326 பேர் ,நன்கு நீந்தத்தெரிந்த தன்னார்வலர்கள் 85பேர் மற்றும் பேரிடர் பயிற்சி முடித்தவர்கள் 58 பேர் ஆகியோர் கொண்ட மீட்புப்படைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்.தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட அவசர காவல் அறை கட்டுப்பாட்டு எண் 04172-271100 ,9884098100 எண்ணிற்கு பொதுமக்கள் அழைக்கலாம் என்று இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் அறிவித்துள்ளார்..

Updated On: 13 Nov 2021 3:03 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...