தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட ஜெய சூர்யா.

பெரியபாளையம் அருகே பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பெரியபாளையம் அருகே மாளந்தூரில் பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் தந்தை கண்டித்ததை தொடர்ந்து மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவர் தனியார் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெயசூர்யா ( வயது 16) இவர் ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் பிளஸ் ௧ படித்து வந்தார். நேற்று முன்தினம் பிளஸ் 1தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததாக ஜெயசூர்யாவின் தந்தை மகனை கடிந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த ஜெயசூர்யா நள்ளிரவில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்த நிலையில் கண்ட மகனை பெற்றோர்கள் அலறி துடித்த மகனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று மாணவன் ஜெய் சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிளஸ் 1தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business