/* */

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் மா.வள்ளலார் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் மா.வள்ளலார் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் மா.வள்ளலார் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் மா.வள்ளலார் தலைமையில் (17.12.2022) வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 - வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை திருத்தத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது, வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர் மா.வள்ளலார், புதுக்கோட்டை நகராட்சி, மாலையீடு, சின்னப்பாநகர் முதலாம்வீதி மற்றும் புதுக்கோட்டை ஒன்றியம், வாகவாசல் கிராமம் ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்டார்.

01.01.2023 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2023-ஆம் ஆண்டில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும் வாக்காளர்களின் பெயர், முகவரி, மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 09.11.2022 முதல் 08.12.2022 வரை படிவங்களை பூர்த்தி செய்து வழங்கப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின்கீழ் இணையதளம் வாயிலாக 33,043 மனுக்களும், நேரடியாக 24,183 மனுக்களும் என மொத்தம் 57,226 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களில் படிவம்-6 (பெயர் சேர்த்தல்) 25,777 மனுக்களும், படிவம்-7 (பெயர் நீக்கல்) 23,180 மனுக்களும், படிவம்-8 (திருத்தம்) 8,269 மனுக்களும் பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மனுக்களின் உண்மைத்தன்மை குறித்தும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர் மா.வள்ளலார், சின்னப்பாநகர் முதலாம்வீதி, மாலையீடு சண்முகாநகர் மற்றும் வாகவாசல் கிராமம் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), மாரி (பொ) (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி, வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Updated On: 17 Dec 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு