/* */

புதுக்கோட்டை சிறையில் கொரோனா தடுப்பூசி முகாம் : அமைச்சர் தொடங்கிவைத்தார்

புதுக்கோட்டை சிறையில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை சிறையில் கொரோனா தடுப்பூசி முகாம் : அமைச்சர் தொடங்கிவைத்தார்
X

புதுக்கோட்டை சிறையில் கைதிகளுக்கான கொரோனா தடுப்பூசி  சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் சிறைத் துறை பணியாளர்களுக்கு இன்று சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து சிறைக்கைதிகளுக்கு ஊசிபோடும் பணிகளை பார்வையிட்டார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்:தமிழக சிறைச்சாலைகளில் தற்போது 57 சதவீத கைதிகள் தான் உள்ளனர்,

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்.

கொரோனா தொற்றின் அடிப்படையில் சிறைக் கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும், எல்லா கைதிகளையும் பரோலில் விடுவித்துவிட முடியாது என்றும் அவர்களின் குற்றச்செயல் தண்டனையை பொறுத்துதான் பரோலில் விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்: சிறையில் உள்ள மருத்துவ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சிறைக் கைதிகளில் 15% பேர் தான் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர், எஞ்சிவர்களையும் தடுப்பூசி செலுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி வருகிறோம்என்று கூறிய அமைச்சர் ரகுபதி

சிறைத்துறையில் பணியாற்றும் அலுவலகர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழக முதலமைச்சர் மனிதாபிமானத்தோடு பரிசீலனை செய்து விரைவில் நல்ல முடிவை எடுப்பார்,

சிறைத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை நிச்சயம் இந்த அரசு உறுதி செய்யும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

Updated On: 4 Jun 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!