/* */

புதுகை மாவட்டத்தில் நாளை முதல் இயங்க தயாராகும் அரசு பேருந்துகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7 கிளைகளும், மண்டலத்தில் 8 கிளைகளும் என மொத்தமாக 385 பேருந்துகள் நாளை முதல் இயங்க தயார் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7 கிளைகளும், மண்டலத்தில் 8 கிளைகளும் என மொத்தமாக 385 பேருந்துகள் நாளை முதல் இயங்க தயார் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு தமிழகம் முழுவதும் முழு ஊர் அடங்கை கடந்த மாதம் பத்தாம் தேதி அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த 48 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி 27 மாவட்டங்களில் சலூன் கடை, டீக் கடை ,மளிகை கடை, உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது அதேபோல் அரசு மதுபான கடைகளும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனாலும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் நாளை 28ம் தேதி முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டல அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை தற்போது சுத்தப்படுத்தி தயார்படுத்தும் பணியில் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக பேருந்துகளை சுத்தம் செய்வது சரியாக இயங்குகிறதா என சரிபார்ப்பது அனைத்து பேருந்துகளிலும் சானிடர்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் மாவட்டத்தில் 7 கிளைகளும், மண்டலத்தில் 8 கிளைகளும் என மொத்தமாக 385 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில், நகர பேருந்துகள் 120, புறநகர் பேருந்துகள் 135ம் நாளை முதல் இயக்கப்படுகிறது. இதனால் தற்போது பேருந்துகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 48 நாட்களுக்கு பிறகு நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசு அறிவித்துள்ள 50 சதவீத பணியாளர்கள் மட்டும் பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது