/* */

சீல் வைக்கப்பட்ட அறை மீண்டும் திறக்கப்பட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைக்கப்பட்ட அறையை மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் திறக்கப்பட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

சீல் வைக்கப்பட்ட அறை மீண்டும் திறக்கப்பட்டதால் பரபரப்பு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான உமாமகேஸ்வரி தலைமையில் கல்லூரி வளாகத்தில் உள்ள தனித்தனி அறைகளில் வாக்கு இயந்திரங்கள் உள்ளே வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இன்று காலை திமுக சார்பில் விராலிமலை தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த வாக்கை பெட்டியில் இருக்கும் நான் நாடா என்று கூறும் வாக்கு பதிவு அறையின் வெளியே இருந்ததை கண்ட திமுக பூத் ஏஜெண்டுகள் அதனை எடுத்து மட்டுமல்ல பலரும் மாவட்ட ஆட்சியர் மற்றவர்களிடம் காட்டி முறையிட்டனர்.


இந்த டாக் எப்படி வெளியே வந்தது இதில் பூத் ஏஜெண்டுகள் கையெழுத்திட்டுள்ளனர். இது இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டது எப்படி வாக்கு பெட்டிகள் உள்ள அறையின் வெளியே வந்தது எனக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான உமா மகேஸ்வரி ,காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வந்த தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவரை தேர்தல் ஆணையம் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அவரை வைத்துக் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற கூடாது அவர் தேர்தல் நடத்தும் அலுவலராக பதவியில் இருந்தால் நாங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது வாக்கு எண்ணிக்கையை திமுக சார்பில் புறக்கணிக்கப்படும் என கூறி திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு முடிந்து விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்கு மையங்களில் எடுத்து வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை மீண்டும் திறந்து அவர்கள் கூறியது போல் அந்த வாக்கு இயந்திரத்தில் நாடா இருக்கிறதா என ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த வாக்கு இயந்திரத்தில் நாடா இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலதண்டாயுதபாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி திமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை வாக்கு எண்ணிக்கையின் போது திறப்பது தான் வழக்கம் ஆனால் மீண்டும் அரசு கல்லூரிகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு மையத்தின் அறையைத் திறந்து புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 8 April 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...