/* */

புதுக்கோட்டையில் அமலானது இரவு நேர ஊரடங்கு

ஊரடங்கு மீறி செயல்பட்ட கடைகளை அடைப்பதற்கு காவல்துறை எச்சரித்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் அமலானது இரவு நேர ஊரடங்கு
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் அடைக்கப்பட்ட கடைகளால் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் காட்சி

புதுக்கோட்டையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மெல்லமெல்ல குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றாக இந்தியா முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு நேற்று புதிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. நோய்த்தொற்றை கட்டுப் படுத்தும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அதேபோல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஹோட்டல் மற்றும் கடைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கியது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு இன்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , புதுக்கோட்டை நகர பகுதிகளில் இரவு 10 மணி முதல் ஓட்டல்கள் மற்றும் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவைகளை அடைப்பதற்கு காவல்துறை வாகனத்தில் மூலம் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுத்தும் ஊரடங்கு மீறி செயல்பட்ட கடைகளை அடைப்பதற்கு காவல்துறை எச்சரித்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து புதுக்கோட்டை கீழராஜவீதி, மேல ராஜவீதி, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கும் அனைத்து ஹோட்டல் மற்றும் பெட்டி கடைகள் அடைக்கப்பட்டதால் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

Updated On: 6 Jan 2022 5:17 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  5. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  6. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  7. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்