/* */

குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசளிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசளிப்பு
X

குறளோவியம் போட்டியில் வெற்றிபெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கி பாராட்டினார்.

குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறளோவியம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டியில் 365 ஓவியங்களை தேர்வு செய்யப்பட்டன. முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 365 ஓவியங்கள் திருக்குறள் குறளோவியம் புத்தகமாக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்குறளோவிய போட்டியில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவர் சந்தோஷ் ரூ.5 ஆயிரம் சிறப்பு பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி மாணவி மதுமிதா, ராசிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ், காளிப்பட்டி மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பிரியா, குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி மாணவர் குமணராஜ், மாணவி ரேணுகாதேவி, ராசிபுரம் பாவை கல்லூரி மாணவர் விக்னேஸ்வரன் மற்றும் நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி முகிஷா ஆகிய 7 பேர் ரூ.1,000-ம் ஊக்கப் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

Updated On: 6 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’