/* */

சமூக நல்லிணக்க பேரணி நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: திருமாவளவன் பேச்சு

இந்தியாவில் நேர்மையாக உழைத்து குடிசையில் வாழும் ஒரே இனம் பட்டியல் இன மக்கள் தான்

HIGHLIGHTS

சமூக நல்லிணக்க பேரணி நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்:  திருமாவளவன் பேச்சு
X

நாமக்கல் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கோஷம் எழுப்பப்பட்டது.

சமூக நல்லிணக்க பேரணி நடத்த நீதிமன்றத்தை நாடுவோம் என்றார் திருமாவளவன்.

வருகிற அக்.2ம் தேதி சமூக நல்லிணக்க பேரணி நடத்த நீதிமன்றத்தை நாடுவேம் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் மர்மமான முறையில் இறந்த பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி, நாமக்கல் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ. மணிமாறன் தலைமை வகித்தார்.

கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியாவில் நேர்மையாக உழைத்து குடிசையில் வாழும் ஒரே இனம் பட்டியல் இன மக்கள் தான். எப்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என பௌத்த மதம் கற்றுக் கொடுத்துள்ளது. அரசு, அரசியல் கட்சி போன்றவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். நமது கோரிக்கை நிறைவேறும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும். அம்பேத்கர் சிலை வைக்க எங்கும் அனுமதி கொடுப்பதில்லை. அப்படிப் பார்த்தால் எங்கு சிலை வைப்பது. சிலை வைப்பதற்கு பிறப்பித்துள்ள அரசு உத்தரவே தவறானது.

வரும் அக்.2ம் தேதி விசிக, இடது சாரிகள் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பேரணி மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் 50 இடங்களில் நடத்தப் போவதாக அறிவித்த அணி வகுப்புக்கும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு விதிக்கப்பட்ட தடை விசிக, இடதுசாரிகளுக்கு கிடைத்த வெற்றி. எனினும், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு நடத்த கேட்ட 50 இடங்கள் போக மற்ற இடங்களில் விசிக, இடதுசாரிகள் நடத்தும் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம். காவல்துறை டிஜிபியை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சந்தித்து அனுமதி கேட்க உள்ளோம். எனவே அக்.2ம் தேதி விடுதலை சிறுத்தைகள் பேரணி நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக நாமகிரிப்பேட்டையில் மர்மமான முறையில் இறந்த பரமசிவம் வழக்கு, நாமக்கலில் கொலை செய்யப்பட்ட குமரேசன் வழக்கு ஆகியவற்றில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி