/* */

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு கூட்டம்

Erode news- ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு கூட்டம்
X

Erode news- மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டத்தின் போது எடுத்த படம்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான மாவட்ட உயர் மட்டக் குழு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில், பேரூராட்சிகள் துறையின் சார்பில் நிலுவையில் உள்ள பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தாளவாடியில் மூலிகை பண்ணை அமைத்தல், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித் திட்டம் குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசின் உரிமைகள் வழங்குதல், அரசு அங்கன்வாடி கட்டிடங்களில் கழிப்பிட வசதி அமைத்துத்தருதல், ஈரோடு விற்பனைக்குழு சார்பில் பர்கூர் துணை ஒழுங்குழுறைவிற்பனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அணுகு சாலை அமைத்தல், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நான்கு வழிச் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனும் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணீஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் (ஆவின்) கவிதா, இணை இயக்குநர் (நலப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முகம்மது குதுரத்துல்லா, (வளர்ச்சி) செல்வராஜன், பிரேம லதா (நிலம்) உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2024 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்