கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

Erode news- கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி.
Erode news, Erode news today- 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை மறுநாள் (11ம் தேதி) கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பெற கல்லூரி செல்ல உள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகள் விண்ணப்பிக்கும் மற்றும் தேர்வு செய்யும் முறைகள், கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், மாணவர்களுக்கான தனிநபர் கவுன்சிலிங் உள்ளிட்ட விரிவான வழிகாட்டல்களை வழங்க கல்லூரிக் கனவு என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (11ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ என 40க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு கல்லூரி பேராசிரியர்களால் வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் உயர்கல்வி பயில கல்வி கடன் பெறும் வழிகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட உள்ளது. இத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டல் கையேடு வழங்கப்பட உள்ளது.
மாலை வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நிகழ்வில் அரங்குகள் அமைக்க உயர்கல்வி நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு 6381422081 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி செல்ல உள்ள மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu